சொந்த மகன், மகளை கழுத்தறுத்து கொலை செய்த கொடூர தந்தை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சல்வார் பட்டியைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ், இவர் கடந்த சில நாட்களாக தனது மனைவி முனீஸ்வரியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று அதிகாலை தனது மகன் முனீஸ்வரன் மற்றும் மகள் முத்துலட்சுமி ஆகியோரை அந்தோணி கழுத்தறுத்துக் கொன்றுள்ளார்.

மேலும், மனைவியையும் கொலை செய்ய முயன்று அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சாத்தூர் காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

படுகாயமடைந்த முனீஸ்வரி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பெற்ற குழந்தைகளையே இரக்கமின்றி கொன்ற தந்தை அந்தோணி ராஜ்ஜை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]