சொக்லெட் என நினைத்து பெனடோல் உட்கொண்ட 4வயது சிறுவன் பரிதாப பலி

மஸ்கெலியா மொட்டிங்கொம் தோட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்த நான்கரை வயது சிறுவன் சொக்லெட் என நினைத்து மருந்து வில்லைகளை உட்கொண்டதால் அந்தச் சிறுவன் உயிரிழந்தான் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (5) இரவு 10 மணி அளவில் இடம்பெற்றது.

சம்பவத்தில் ஸ்ரீ மனோகரன் மர்வின் என்ற சிறுவனே உயிரழந்தார்.

“மஸ்கெலியா மொட்டிங்கொம் தோட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் சிறுவனின் தந்தை வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சென்று வீடு திரும்பிய போது, தான் கொண்டு வந்த பையில் சொக்லெட் வகைகள் உள்ளதாகவும் அதனை எடுத்து சாப்பிடுமாறும் தனது மகனுக்கு கூறியுள்ளார்.

சிறுவன் தனது தந்தை கொண்டு வந்த பையினுள் சொக்லெட்டுக்களை தேடும் பொழுது சிறுவனது கையில் மருந்துவில்லைகள் காட் ஒன்றே கிடைத்துள்ளது. அந்த மருந்து வில்லைகளை சொக்லெட் என நினைத்து சிறுவன் உட்கொண்டுள்ளான்.

இதனை அறிந்து கொண்ட வீட்டார் சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, மஸ்கெலியா வைத்தியசாலையில் இருந்து கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றபட்டு பின்னர், கிளங்கன் வைத்தியசாலையில் இருந்து கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளையிலேயே சிறுவன் உயிரிழந்தான்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]