சொகுசு வாகனங்களுக்கு வரி அதிகரிப்பு, இலத்திரனியல் வாகனங்களுக்கு வரி விலக்கு

சொகுசு வாகனங்களுக்கு வரி அதிகரிப்பு, இலத்திரனியல் வாகனங்களுக்கு வரி விலக்கு

அனைத்து விதமான இலத்திரனியல் வாகனங்களுக்கும் ஒரு மில்லியன் ரூபா வரையான வரி விலக்கு அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

அதேநேரம் சொகுசு வாகனங்கள் மீதான 2.5 மில்லியன் ரூபா இறக்குமதி வரி விதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் டீசல் மூலம் இயங்கும் முச்சக்கர வண்டிகளுக்கு 50,000 ரூபாவினால் வரி அதிகரிக்கப்படும் என்றும், தற்போது பாவனையில் இருக்கின்ற முச்சக்கர வண்டிகளை பங்களாதேஷிற்கு ஏற்றுமதி செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

இன்றைய வரவு செலவுத் திட்ட உரையின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]