சைவ நற்பணி மன்றம் பூரண ஆதரவு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் இன்று (19) முன்னெடுக்கப்படும் கடையடைப்பு மற்றும் கவனயீர்பு போராட்டத்துக்கு மட்டக்களப்பு மாவட்ட மட்டக்களப்பு மாவட்ட சைவ நற்பணி மன்றம்
பூரண ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.

கவனயீர்பு பேரணியில் எமது தமிழ் பேசும் மக்கள் அணைவரும் இன மத பேதமின்றி அனைவரும் தவறாது கலந்து கொண்டு எமது மக்களின் துயரில் பங்கெடுக்குமாறு அறைகூவல் விடுத்துள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்ட சைவ நற்பணி மன்ற தலைவர் சத்திஜோயாத சிவாச ;சாரியார் சிவஸ்ரீ அ.கு. லிகிதராஜக்குருக்கள் திங்கட்கிழமை (18) விடுத்துள்ள அறிக்கiயிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கiயில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : இலங்கைத் திருநாட்டின் குடிமக்களாக வாழும் நாங்கள் சகல மனித உரிமைகளோடு தனி மனித சட்டத்தின் கீழ் வாழ்ந்து வருகின்றோம். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் நாங்கள் பல காலம் பல கஸ்டத்தின் மத்தியில் சுய உரிமைகளைப் பெறுவதற்கு எத்தனித்து பலவற்றை இழந்துள்ளோம்.

அதே வேளை எமது கிழக்கு மாகாணத்தில் பலர் பல சம்பவங்களின் மூலம் கடத்தப்பட்டு இன்றும் கூட எங்கு இருக்கின்றார்கள் என்று தெரியாமல ; பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள். குறிப்பாக கணவனை இழந்த மனைவி, தகப்பனை இழந்த குழந்தைகள் பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள ; என்பன பலர் பல மனவேதனையோடு வாழ்ந்து வருகின்றார்கள்.

நாம் சற்று எமது குடும்பத்தையும் உற்று நோக்கவேண்டும் எமது குடும்பத்தில் இவ்வாறு ஒரு சம்பவம் நிகழ்ந்திருந்தால் நாங்கள் அந்த நிலையில் எவ்வளவு சிரமப்படுவோம். என்று சற்று சிந்திக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் நாங்கள் நிம்மதியாய் வாழ்ந்தால் சரி என்று வாழக் கூடாது.

எமது குழந்தைகள் எதிர்காலத்தில் இவ்வாரான பிரச்சணைகளை எதிர்நோக்கக் கூடாது என்று நாங்களும் நினைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழர்களாகிய நாங்கள் எங்களின் ஒற்றுமையைப் பயன்படுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தின் சூழ் நிலையைப் இலங்கை அரசிக்கும் சர்வதேசத்திற்கும் எடுத்துகாட்டும் தருணம் இது எனவே எதிர்வரும் 19ம் திகதி செவ்வாய்க் கிழமை (19-03-2019) காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடிப்பாலத்திற்கு அருகாமையில் அமைதியான நியாயம் கேட்கும் பேரணி காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி மட்டக்களப்பு காந்திப்பூங்காவரை இப்ரேணி நடை ஊர்வலமாக நடைபெறவுள்ளது.

இப்பேரணியில் எமது தமிழ் பேசும் மக்கள் அணைவரும் இன மத பேதமின்றி அனைவரும் தவறாது கலந்து கொண்டு எமது மக்களின் துயரில் பங்கெடுப்போம்: என குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]