(சைபர் க்றைம்) விசாரணைக்குழு வரை சென்றுள்ள விஜயகலா மகேஸ்வரனின் அவதூறான செய்தி!!

சிறுவர் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக அவதூறான செய்தி வெளியிட்ட ஊடகவியலாளரை இணையத்தள குற்றவியல் (சைபர் க்றைம்) விசாரணைக்குழு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றும் த.வசந்தரூபனையே இணையத்தள குற்றவியல் (சைபர் க்றைம்) விசாரணைக்குழுவினர் இன்று (11) யாழ்.மாநகர சபையில் வைத்து விசாரணை முன்னெடுத்துள்ளனர்.

இணையத்தளம் ஒன்றில் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக அவதூறான செய்தி பிரசுரித்த குற்றச்சாட்டிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி தொடர்பாக சிறுவர் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தெரிவித்ததை தொர்ந்து, இணையளத்தள குற்றவியல் பொலிஸாருக்கு முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம், இன்று யாழிற்கு வருகை தந்த இணையத்தள குற்றவியல் தொடர்பான விசாரணைக்குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.