சைட்டம் விவகாரம் :அரசுக்கு எச்சரிக்கைவிட இன்று கொழும்பில் கூடுகிறது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

சைட்டம் விவகாரம் தொடர்பில் இன்று கொழும்பில் உயர்மட்டப் பேசிசுக்கள்.

சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 5ஆம் திகதி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன், இணைந்து 30இற்கும் அதிகமான தொழிற்சங்கள் முன்னெடுத்து பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் தொடர்பில் அரசு எத்தகைய நிலைப்பாட்டில் உள்ளது.

எதிர்காலத்தில் தாங்கள் முன்னெடுக்கவுள்ளச் செயற்பாடுகள் குறித்து ஆராய அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று கூடவுள்ளது.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை அரசுடமையாக்குமாறும், எட்கா உடன்படிக்கை மற்றும் அரச சொத்துகளை வெளிநாடுகளுக்கு விற்பனைச் செய்வதை நிறுத்துமாறும் எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 5ஆம் திகதி நாடுதழுவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைமைத்துவத்தின் கீழ் 30இற்கும் அதிகமான அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், நாட்டின் வைத்திய சேவை, அத்தியவசியத் தேவை, போக்குவரத்து சேவை என அனைத்து மட்டத்திலும் பெரும் பாதிப்புக்கு மக்கள் உள்ளாகியிருந்தனர்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இவ்வாறு தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருவதால் மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகுவதாக அரசு மீது கடும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டிருந்தது.

என்றாலும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இவ்வாறான பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்வது சிலரின் அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழாகும் என்று அரசு, அவர்களின் போராட்டத்தை முற்றாக நிராகரிப்பதுடன், நாட்டுக்குத் தனியார் மருத்துவக் கல்லூரிகள் அவசியம் என்பதுடன், அதற்கு ஒரு பொறிமுறையை அரசு தயாரிக்கும் என்றும் கூறியுள்ளது.

இந்நிலையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கூடிய ஆராய குறித்த சங்கத்தின் உயர்மட்ட குழு இன்று கொழும்பில் கூடுகிறது. இதன்போது அரசு எதிராக பல்வேறு தீர்மானங்களையும், போராட்டத்தை அரசு கண்டுகொள்ளாவிடின் அடுத்து முன்னெடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]