சைட்டம் தொடர்பில் அமைச்சரவை பத்திரம் தாக்கல்

மாலபேயில் அமைந்துள்ள தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்துக்கான தெற்காசிய நிறுவனமான சைட்டத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் தொடர்பில் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மருத்துவ கல்லூரியில் கற்கும் 980 மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் மருத்துவ பீடத்தில் இணைத்துக்கொள்ளவது தொடர்பில் இந்த அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் உயர் கல்வியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து இந்த அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்துள்ளனர்.