சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை நிரந்திரமாக மூடிவிட கோரி கிழக்குப்பல்கலைக் கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை நிரந்திரமாக மூடிவிட கோரி கிழக்குப்பல்கலைக் கழக மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சைட்டம் தனியார்

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை நிரந்தரமாக மூடிவிட வேண்டும் எனக் கோரி இன்று கிழக்குப்பல்கலைக் கழக மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு – வந்தாறுமூலை வளாக முன்றலில் இன்று (06) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

சைட்டம் தனியார்

மாணவர்கள் தமது கோரிக்கைகளடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் விடுதி பகுதியிலிருந்து புறப்பட்டு பிரதான வீதியோரம் நின்று தமது கோஷங்களை எழுப்பினர்.

போலித் தீரப்பு வேண்டாம் சைட்டத்தை உடனே ரத்துச் செய், வாக்களித்த ஜனநாயகம் இதுதானா?, பெற்றோர்களை அழித்து சைட்டத்தை பாதுகாப்பதா? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திய வண்ணம் கோஷ கோஷங்களை எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சைட்டம் தனியார்சைட்டம் தனியார்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]