சைட்டம் எதிர்ப்பால் நாட்டின் வைத்திய சேவைகள் முடக்கம்

சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை அரசுடமையாக்குமாறு கோரி இன்று நாடுதழுவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து பணிப்பகிஷ்கரி தோல்வி என்பதை உணர்ந்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்காலத்தில் செயற்பட வேண்டும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை அரசுடமையாக்குதல் , எட்கா உடன்படிக்கையை கைவிடல், அரச சொத்துகளை சர்வதேசத்திற்கு விற்பதை நிறுத்தல் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று போராட்டத்தில் குதித்துள்ளது.
இதனால் வைத்திய சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக சில வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை பிரிவு மாத்திரமே இயங்கியது.

மருத்துகளைப் பெற்றுக்கொள்ளவந்த நோயாளர்களுக்கு ஏமாற்றம் மாத்திரமே மிஞ்சியது. இந்தப் பணிப்பகிஷ்கரிப்பை அரசு உடனடியாக கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரச வைத்திய அதிகாரிகங்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புகையிரத சேவைகள் சங்கம்பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால் புகையிரதப் போக்குவரத்த பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை போக்குவரத்து சங்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தாலும் இன்று அரச பஸ்கள் வழமை போன்றே இயக்கப்பட்டு வருகின்றன.

OLYMPUS DIGITAL CAMERA

ஆசியர் சங்கம் மற்றும் அனைத்துப் பல்கலலைகழக மாணவவர் ஒன்றியம் என்பன பணிப்பகிஷ்கரிப்புக்கு ஆதரவு வழங்கியதால் கல்வி நடவடிக்கைகள் இன்று பாதிக்கப்பட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]