சைட்டம் உடனடியாக கலைக்கப்பட வேண்டும் : அரசுக்கு எச்சரிக்கை விடுகிறது ஜே.வி.பி.

சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை கலைக்க வேண்டியதே அரசு உடனடியாக செய்யவேண்டியுள்ள செயற்பாடு என்று ஜே.வி.பி. அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அக்கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் வலியுறுத்தியதாவது,

சைட்டத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்தப் பல்கலைகழக மாணவர்கள் நேற்றுமுன்தினம் கொழும்பில் மேற்கொண்ட பேரணி மீது அரசு நடத்திய தாக்குதலை ஜே.வி.பி. வண்மையாக கண்டிக்கிறது. அவர்கள் அரசுக்கு எதிராக புரட்சி செய்யவோ அல்லது அரசை கவிழ்க்கவோ நடைபயணமாக வரவில்லை.
அவர்களின் கோரிக்கை சாதாரணமானது. மாணவர்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குவதை விடுத்து அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டியதே அரசின் கடமை. கைதுசெய்யப்பட்ட அனைத்த மாணவர்களையும் உடனடியாக விடுதலைச் செய்ய வேண்டும்.

அரசுக்கு எதிராக மக்கள் அழுத்தம் கொடுக்கப்படுவது குறைவடைய வேண்டுமெனில் மக்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும். இந்த அரசு போராட்டங்களை தானே வரவழைத்துக்கொண்டு போராட்டம் நடத்துவோர் மீது குற்றத்தை சுமத்த பார்க்கின்றது.

சைட்டம்

இவற்றை விடுத்து மக்களின் கருத்துத்தை அரசு உள்வாங்க வேண்டும். பொது மக்களையும் மாணவர்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கி எதனையும் சாதிக்க முடியாது. எனவே, உடனடியாக சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி கலைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]