சைட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று நாடுதழுவிய பணிப்பகிஷ்கரிப்பு

சைட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று நாடுதழுவிய பணிப்பகிஷ்கரிப்பை அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொள்கிறது.

இந்தப் பணிப்பகிஷ்கரிப்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன், அகில இலங்கை போக்குவரத்து சங்கம், அரச தொழிற்சங்கங்களின் ஒன்றியம், அனைத்துப் பல்கலகலைகழக ஒன்றியம், ஆசிரியர் சங்கங்கள், ஆயுர்வேத வைத்தியர் சங்கம் என 121 இற்கும் மேற்பட்ட அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்களும், சங்கங்களும் ஆதரவுத் தெரிவித்துள்ளன.

பிரதான மூன்று கோரிக்கையை மையப்படுத்தியே இன்றைய தினம் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படுகிறது. மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை அரசுடமையாக்கல், எட்கா உடன்படிக்கையை அரசு கைவிடய வேண்டும், அரச வளங்களை வெளிநாடுகளுக்கு தாரைவார்ப்பதை உடனடியாக அரசு நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளே பிரதானமாக வலியுறுத்தப்படுகிறது.
அத்துடன், உயர் கல்வியை தனியார் மயப்படுத்தல், இலங்கையில் தனியார் பல்கலைகழகங்களை அமைக்க நடவடிக்கை என்பவற்றுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிப்பகிஷ்கரிப்புக்கு ஆதரவுத் தெரிவிக்கப் போவதில்லைஎ என்று முன்னதாக தனியார் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன. இதன் காரணமாக போக்குவரத்துச் சேவை பாரிய பாதிப்புகள் ஏற்படாது என்று அரசு கூறியுள்ளது. இதேவேளை, அரச ஊழியர்கள் சங்கமும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவுத் தெரிவிக்கப் போவதில்லை என்று நேற்று அறிவித்துள்ளது.

என்றாலும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொள்ளப்பட இந்தப் போராட்டத்தால் நாட்டின் அனைத்து அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவு முற்றாக இயங்கப்போவதில்லை என்று குறித்த சங்கம் அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தின் பின்னராவது ஜனாதிபதி தமது கோரிக்கைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறித்த சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]