13. ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தில் அதிர்ந்து போவாயானால் நீ எனது தோழன்.

12. ஒருவரின் காலடியில் வாழ்வதைவிட , எழுந்து நின்று உயிரை விடுவது எவ்வளவோ மேல்.

11. உன் இனத்தில் யார் பெயரை சொன்னால் , எதிரி குலை நடுங்குவானோ அவனே உன் இனத்தின் தலைவன்.

10. போருக்குச் செல்லும்போது கையில் ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை. நீ சுத்த வீரன் என்றால் உனக்கான ஆயுதத்தை நீ செல்லும் போர்க்களத்திலேயே உன்னால் சம்பாதித்து கொள்ள முடியும்.

9. நான் சாகடிக்கப்படலாம் ஆனால் ஒரு போதும் தோற்கடிக்கப்படமாட்டேன்.

8. உன்னால் செய்ய முடியாததை , கடைபிடிக்க முடியாததை மற்றவனிடம் எதிர்ப்பார்க்காதே!

7. நீ ஊமையாய் இருக்கும் வரை உலகம் செவிடாய் தான் இருக்கும்.

6. விதைத்துக் கொண்டே இரு. முளைத்தால் மரம் , இல்லையேல் உரம்.

5. எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ, அங்கே விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள்.

4. நாங்கள் யதார்த்தவாதிகள் அதனால் அசாத்தியங்களை கனவு காண்கிறோம்.

3. நீ மண்ணுக்காக போராட தயங்குகிறாய், ஆனால் ஒவ்வொரு விதையும் மண்ணோடு போராடியே மரமாகிறது.

2. வியர்வை சிந்தாத உன்னாலும், மை சிந்தாத பேனாவாலும் எதையும் சாதித்திட முடியாது.

1. புரட்சிகள் உருவாகுவதில்லை நாம் தான் உருவாக்க வேண்டும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]