சேதமடைந்த நாணயத் தாள்களை மாற்ற காலநீடிப்பு

சேதமடைந்த நாணயத் தாள்களை மாற்றிக்கொள்வதற்கு வழங்கப்பட்ட கால எல்லை, எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சேதமடைந்த நாணயத் தாள்கள் தம்மிடம் இருக்குமாயின், அதிகாரமளிக்கப்பட்ட வர்த்தக வங்கிக் கிளைகளில் 2017 டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற மத்திய வங்கியின் தீர்மானத்துக்கு ஏற்ப, அது தொடர்பாக மக்களுக்கு, 2017 ஜூலை மாதம் முதல் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மத்திய வங்கிக்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமையவே, குறித்த கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

மக்களிடமுள்ள அத்தகைய நாணயத்தாள்களை வர்த்தக வங்கிக் கிளைகளில் மாற்றிக்கொள்வதற்கு மேலும் சந்தர்ப்பத்தை வழங்கும் வகையிலேயே, அந்த கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]