செல்போன் சார்ஜ் போட்டபடியே தூங்கியதால் 90 வயது முதியவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

செல்போன் சார்ஜ் போட்டபடியே தூங்கியதால் 90 வயது முதியவரும் அவரது மகளும் உயிரிழந்துள்ள சம்பவம் சென்னையில் இடம்பெற்றுள்ளது.

சென்னையை அடுத்த தாம்பரம் அரங்கநாதபுரம் காதர்பாய் பகுதியை சேர்ந்தவர் ஹபிக் முகமது (வயது 90). இவர் தனது திருமணமான மகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் ஹபிக் முகமது இரவு வீட்டில் தூங்கும்போது தனது செல்போனில் சார்ஜ் போட்டபடி தூங்கிய நிலையில் எதிர்பாராதவிதமாக திடீரென செல்போன் சார்ஜரிலும், செல்போனிலும் தீ பற்றி எரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கோர விபத்தில் ஹபிக் முகமதும் அவரது மகளும் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதுகுறித்து, தாம்பரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]