செல்போன்களை அருகில் வைத்திருந்தால் இவ்வளவு ஆபத்தா?

செல்போன்களை அருகில் வைத்திருந்தால் இவ்வளவு ஆபத்தா?

குழந்தைகள் முதல் இளைஞர்கள் ஏன் பெரியவர்கள் வரை செல்போன் இல்லாமல் வாழ்வது என்பது கடினமான ஒன்றாக மாறிவிட்டது. செல்போன் என்பது ஒரு மாயாஜால சிறை ஆகும். அதில் காவலர்களும் இல்லை, பூட்டும் இல்லை. ஆனால் அதற்குள் மாட்டிக்கொண்டு நாம் வெளியே வர விரும்புவதில்லை.

செல்போனால் ஏற்படும் ஆரோக்கிய கோளாறுகள் பற்றி பலரும் கூற கேட்டிருக்கிறோம். ஆனால் அது நாளுக்குநாள் வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது. நம்மில் பலரும் காலை எழுந்தவுடன் முதலில் எடுப்பது செல்போனைத்தான்.

நம் கைக்கு எட்டும் தூரத்திலியே செல்போன் இருக்கவேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வளர்ந்து விட்டது. செல்போனை படுக்கைக்கு அருகில் வைத்துக்கொண்டே தூங்குவதால் ஏற்படும் மோசமான விளைவுகள் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.செல்போன்களை

 

மனிதர்கள் அனைவரும் போனை சுமந்துகொண்டுதான் அனைத்து இடங்களுக்கும் செல்கின்றனர். குறிப்பாக ஆண்கள் தங்கள் பேண்ட் பாக்கெட்களிலும், பெண்கள் மார்புக்கு அருகிலும் செல்போனை வைக்கின்றனர். இது மிகவும் ஆபத்தான ஒரு பழக்கமாகும்.

செல்போனால் ஏற்படும் கதிரியக்கங்கள் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த இடங்களில் செல்போனை வைப்பது ஆண்களுக்கு ஆண்மைக்குறைவும், பெண்களுக்கு மார்பக புற்றுநோயும் ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

செல்போன்களை

இந்த தலைமுறை குழந்தைகள் மிகவும் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அதனால் செல்போன் பற்றிய அனைத்து தகவல்களையும் மிகச்சிறிய வயதிலேயே கற்றுக்கொள்வதால் அதனை அதிகம் உபயோகிக்க தொடங்குகிறார்கள்.

இங்குதான் ஆபத்தே, ஏனெனில் குழந்தைகளின் மண்டை ஓடு மிகவும் மெலிதனதாக இருக்கும், மேலும் அவர்கள் மூளையின் செயல்திறனும் இப்பொழுதுதான் அதிகரிக்க தொடங்கியிருக்கும். அவர்களின் மெல்லிய மண்டை ஓட்டால் செல்போனில் இருந்து ஏற்படும் கதிரியக்கத்தை தடுக்கவோ, தாங்கவோ இயலாது. இதனால் அவர்களுக்கு பல மோசமான பிரச்சினைகள் ஏற்படலாம்.

செல்போன்களை

செல்போன் உங்கள் உடலை விட்டு தள்ளியிருக்கும் சிறிய தூரம் கூட பெரிய மாற்றத்தை உண்டாக்கும். முடிந்தளவு ப்ளூடூத் ஹெஸ்ட்டை பயன்படுத்தவும். ஏதாவது தரவிறக்கம் செய்யும்போது போனை விட்டு தள்ளியே இருங்கள்.

செல்போனை எப்பொழுதும் கைப்பை அல்லது தோள்பைகளில் வைக்க பழகுங்கள். பேண்ட் பாக்கெட்டுகளிலோ, உள்ளாடைகளிலோ வைப்பதை தவிர்க்கவும்.

இரவு தூங்கும்போது படுக்கைக்கு அருகிலோ அல்லது தலையணைக்கு அடியிலோ செல்போனை வைத்து தூங்கும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.

செல்போன்களை

அந்த சமயங்களில் ஏற்படும் கதிரியக்கம் உங்கள் மூலையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் மூளையில் கட்டி ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே குறைந்தது 5 அடியாவது செல்போனை தள்ளி வைக்கவும்.

பலரும் இப்பொழுது பயணங்களில் மட்டுமின்றி சாலைகளில் நடக்கும்போதும் ஹெட்செட்டை உபயோக்கிறார்கள். ஹெட்செட்டை நீங்கள் உபயோகிக்காத போதும் அவை செல்போனுடன் இணைந்திருந்தால் கதிரியக்கங்களை வெளியிட கூடியது. எனவே தேவையற்ற நேரங்களில் ஹெட்செட்டை கழட்டி வைக்கவும்.

செல்போன்களை

செல்போனை உங்கள் அருகில் வைத்துக்கொண்டு தூங்கும்போது அது வெளிவிடும் கதிரியக்கம் உங்கள் உடலில் மெலடோனின் ஹார்மோனில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த ஹார்மோன்தான் உங்கள் நிம்மதியான தூக்கத்திற்கு காரணமாக அமைகிறது. இதில் பாதிப்பு ஏற்படும்போது அது உங்கள் தூக்கத்தை பாதிக்கும். இதனால் இரவில் நீங்கள் அடிக்கடி விழித்துக்கொள்ள நேரலாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]