செல்போனின் பாஸ்வோர்ட் சொல்லாததால் கணவனுக்கு மனைவி செய்த கொடூரம்

இந்தோனேஷியாவில் கணவனை உயிரோடு எரித்துக்கொன்ற மனைவியை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

West Nusa Tenggara என்ற பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, Ilham Cahyani என்ற பெண்மனி தனது கணவர் Dedi Purnama – யிடம் செல்போனின் பாஸ்வோர்ட் எண்னை தருமாறு கேட்டுள்ளார், அதற்கு கணவர் மறுத்துள்ளார்.

இதனால் இவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற மனைவி பெட்ரோலை எடுத்து தனது கணவனின் மீது ஊற்றியுள்ளார்.

இதில், பலத்த காயமடைந்த கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து மனைவி மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]