முகப்பு News India செல்பி மோகத்தால் பிறந்தநாள் அன்றே பலியான 5வயது சிறுவன்

செல்பி மோகத்தால் பிறந்தநாள் அன்றே பலியான 5வயது சிறுவன்

தந்தையுடன் செல்பி எடுக்கும்போது காவிரி ஆற்றில் இருந்து தவறி விழுந்த 5 வயது சிறுவன் அவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

நாமக்கல் கரூர் மாவட்டத்திற்கு இடையே கட்டப்பட்டுள்ளது வாங்கல் மோகனூர் காவிரி ஆற்று பாலம். மொத்தம் 56 தூண்களை கொண்டது இந்த காவிரி ஆற்று பாலம்.

தற்போது தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய்து வருவதாலும். அண்டை மாநிலமான கர்நாடகாவில் பெய்யும் கனமழை காரணமாக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட்டதால் காவிரி தமிழகத்தை வந்தடைந்தது.

இதில் தமிழகம் முழுவதும் உள்ள அணை, ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வறண்டு கிடந்த இடங்களில் தற்போது தண்ணீர் தான் தெரிகிறது. இதனை பார்க்கவே பலர் குடும்பங்களோடு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பாபு தனது 5 வயது மகன் அஸ்வந்த் பிறந்தநாளையோட்டி அவனை மோகனூர் ஆற்று பாலத்திற்கு தண்ணீர் கரை புரண்டோடுவதை காண்பிப்பதற்கு அழைத்து வந்தார்.

அப்போது செல்பி எடுக்கும் போது மோகனூர் ஆற்று பாலத்தில் இருந்து தவறி விழுந்துவிட்டான். இது குறித்து சம்பவ இடத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பிறந்தநாளன்று அஸ்வந்திற்கு நேர்ந்த சம்பவம் அப்பகுதியில் இருப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com