செல்பி எடுத்த மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

ஆற்றில் நீராடச் சென்ற இரு பாடசாலை மாணவர்கள் செல்பி எடுக்க முயன்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – கல்லியடி ஆற்றுப் பகுதியில் நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

புகைப்படம் எடுப்பதற்காக ஆற்றின் ஆழமான பகுதி நோக்கிச் சென்ற போதே அவர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு – சிவநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயதான இருவர் நீரில் மூழ்கியதாக அவர்களது நண்பர்கள் கூறியதும், கிராம மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.