செல்ஃபி மோகத்தால் 10 மாத குழந்தையை பறிகொடுத்த தம்பதியினர்- அதிர்ச்சி வீடியோ உள்ளே!!

செல்ஃபி மோகத்தால் தங்களது 10 மாத குழந்தையை கண் எதிரே பறிகொடுத்து தவிக்கின்றனர் ராஜஸ்தான் மாநில இளம் தம்பதிகள்.

ராஜஸ்தான் மாநிலம; கங்காநகர் பகுதியில் தங்களது 10 மாத குழந்தையை மருத்துவரிடம் காண்பிக்க அழைத்து சென்றுள்ளனர். மருத்துவரை பார்த்துவிட்டு அருகில் உள்ள சிஜிஆர் ஷாப்பிங் மாலிற்கு தம்பதிகள் சென்றுள்ளனர்.

3 வது மாடியில் தங்களது குழந்யையை கையில் வைத்துக் கொண்டு எஸ்கேலெட்டர் அருகே ஆரம்பத்தில் செல்ஃபி எடுக்கின்றனர்.

பின்னர் சிறுது நேரம் கழித்து எஸ்கலேட்டரில் குழந்தையுடன் ஏறுகின்றனர். முதல் படியில் கால் வைத்ததும் கணவர் எஸ்கலேட்டரில் இருந்தவாறே குழந்தையுடன் செல்ஃபி எடுக்க முயற்சிக்கின்றார். இதற்காக மனைவியை குழந்தையுடன் போஸ் கொடுக்க சொல்ல , போஸ் கொடுக்கும் போது மனைவி பேலன்சை இழந்து கையில் இருந்து அவர்களது குழநதை 3 வது மாடி எஸ்கலேட்டரில் இருந்து கிழே விழுகின்றனது.

கையில் இருந்து தவறிய குழந்தை கம்பியில் அடிபட்டு கீழே விழுகின்றது. மருத்துவமனைக்கு குழுந்தை கொண்டு செல்லப்பட்டதும் குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எஸ்கலேட்டரில் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு குழந்தையை பறிகொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறு குழந்தைகளை எஸ்கலேட்டரில் அழைத்து செல்லும் பெற்றோர்கள் மிகவும் கவனத்துடன் இருப்பதும். முடிந்தவரை எஸ்கலேட்டரை தவிர்த்துக் கொள்வதும் நல்லது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]