நீர்தேக்கங்களுக்கு செயற்கை மழை

செயற்கை மழை

மலையகத்திலுள்ள பிரதான நீர்தேக்கங்களுக்கு செயற்கை மழையை பெய்விக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக, தாய்லாந்து நாட்டு ஆய்வு குழுவினர் காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்தேக்கங்களுக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்தனர்.

இலங்கை மின்சாரசபையின் வேண்டுகோளுக்கிணங்க தாய்லாந்து நாட்டிலிருந்து குறித்த நிறுவன அதிகாரிகள் வருகைத்தந்து ஆய்வினை மேற்கொண்டனர்

மலையகத்தில் தொடரும் வெயில் காலநிலையினையடுத்து செயற்கை மழையினூடாக நீர்தேக்கங்களுக்கு மழையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாய்லாந்து நாட்டின் அனுமதியுடன் அங்கிகாரம் பெற்ற நிறுவனமாக விளங்கும் தாம், உலகில் பல நாடுகளில் செயற்கை மழை பெய்வித்துள்ளதுடன், 1981ஆம் ஆண்டு காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்தேக்கங்களுக்கு செயற்கை மழை பெய்வித்துள்ளதாகவும் ஆய்வு குழுவினர் தெரிவித்தனர்

செயற்கை மழையினால் மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ, சூழலுக்கோ பாதிப்புகள் ஏற்படாது என்றும் ஒருவகை பதார்த்தம் பயன்படுத்தியே செயற்கை மழை தோற்றுவிப்பதாகவும் அதற்காக இலங்கை விமானபடையின் விமனங்களும் ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்

காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்தேக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இலங்கை மின்சாரசபையினர். மத்திய மாகாண சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் மாவெளி திட்ட அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டதுடன் தொடந்து கொத்மலை, விக்டோரியா, ரந்தனிகல நீர்தேக்கங்களிலும் மேற்படி ஆய்வினை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.
Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]