செயற்கை மழையை பொழிவிக்க புதிய திணைக்களம் உருவாக்க நடவடிக்கை

செயற்கை மழையை பொழிய வைப்பதற்கான திணைக்களம் ஒன்றை சக்தி, மின்சக்தி அமைச்சு, புதிதாக உருவாக்கவுள்ளது.

சக்தி, மின்சக்தி பிரதி அமைச்சராக இருந்த அஜித் பெரேராவை மேற்கொள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

நீர்மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தை பேணுவதற்காகவும், வரட்சியின் போது விவசாயத்துறைக்கு பாதுகாப்பு அளிப்பதற்காகவுமே இந்த செயற்கை மழைக்கான திணைக்களம் உருவாக்கப்படவுள்ளது.

விமானப்படை, வளிமண்டலவியல் திணைக்களம், மின்சார சபை, நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அதிகாரசபை ஆகியவற்றின் அதிகாரிகள் அடுத்த மாதம் தாய்லாந்துக்குச் சென்று, செயற்கை மழையை பொழிவிப்பது தொடர்பான பயிற்சிகளை பெறவுள்ளனர்.