முகப்பு News Local News செப்புக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகனவிபத்தில் தந்தையும், மகனும் பலி

செப்புக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகனவிபத்தில் தந்தையும், மகனும் பலி

அநுராதபுரம், செப்புக்குளம் பகுதியில் நேற்று (14) மாலை 4.20 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.

ஹொரவபத்தான பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் பாதை ஓரத்தில் இருந்த மின் கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த மூவரை மிஹிந்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்

ஹொரவபத்தான பகுதியை சேர்ந்த 8 வயதுடைய மகனும் 41 வயதுடைய தந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com