செப்டெம்பரில் மாகாணசபை தேர்தல்

மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அடுத்த மூன்று மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

குருநாகலில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

“மாகாணசபைத் தேர்தல்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்த முடியும். அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் மே மாதமளவில் ஆரம்பிக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]