சென்னை விமான நிலையத்தில் அபி நந்தன் பெற்றோர்களுக்கு மாலை மரியாதையுடன் வரவேற்பு- வீடியோ உள்ளே

கடந்த மூன்று நாட்களாக இந்தியாவில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் செய்தி இந்திய ராணுவ வீரர் அபிநந்தன் பற்றித்தான். பாகிஸ்தான் நடத்திய புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடத்திய ராணுவம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கி இருந்த முகாம்களை அழித்தது. இதற்கு எதிர்த்தாக்குதல் அளிக்கும் வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காலை பாகிஸ்தான் போர் விமானங்கள் சில இந்திய எல்லைக்குள் ஊடுருவ பார்த்தது.

அதனை இந்திய ராணுவ வீரர்கள் சுட்டுத் அழித்தனர். இந்த தாக்குதலின்போது எதிர்பாராதவிதமாக இந்திய ராணுவ வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தார். அவரை தற்போது பாகிஸ்தான் அரசு சிறை பிடித்து வைத்துள்ளது அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்தியா சார்பில் கடும் கண்டனம் எழுந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நேற்று திடீர் திருப்பமாக பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசினார்.

அதில் அமைதியை கருத்தில் கொண்டு நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானியை விடுவிக்க போகிறோம் என்று கூறினார்.

அதன்படி இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளார். இஸ்லாமாபாத்தில் இருந்து லாகூருக்கு அழைத்து செல்லப்படும் விமானி அபிநந்தன், அங்கிருந்து விமானம் மூலம் மும்பை அல்லது டெல்லி அழைத்து வரப்படலாம் என கூறப்படுகிறது. அதே சமயம் வாகா எல்லையிலும் அபிநந்தனை பாகிஸ்தான் அரசு ஒப்படைக்க வாய்ப்புள்ளதாக, தெரிகிறது. இந்தியா திரும்பும் தமது மகன் அபிநந்தனை பார்ப்பதற்காக, அவரது தந்தை வர்த்தமான், தாய் சோபா, உறவினர்கள் பிரசாத், உஷா, அசோக் பானுகுமார் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர். அங்கே அவர்களுக்கு மாலை மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]