சென்னை சூப்பர் கிங்ஸ் இலகுவான வெற்றியை ருசித்தது

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் இலகுவான வெற்றியை ருசித்தது

புனேயில் நேற்றையதினம் நடைபெற்ற ஐபில் போட்டியில் றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர்கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் தலைவர் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவரின் முடிவில் 127 ஓட்டங்களைக் குவித்தனர்.

பந்துவீச்சில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் மற்றும் ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பெங்களூர் றோயல் சேலஞ்சர்ஸ் சார்பில் அதிகபட்சமாக பார்தீவ் பட்டேல் 53 ரன்னும், டிம் சவுத்தி 36 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றையிலக்க ரன்னில் வெளியேறினார்கள்.

பின்னர் 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி களமிறங்கியது. வாட்சன், அம்பதி ராயுடு ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

அம்பதி ராயுடு 32 ரன்களுடன் ஆட்டமிழந்தார். டோனி 31 ரன்னும், பிராவோ 14 ரன்களுடம் கடைசி வரை களத்தில் இருந்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]