சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் சம்பளம் இவ்வளவா!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் சம்பளம் இவ்வளவா!!! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இது தவிர இன்று நடைபெற்றுவரும் ஏலத்தில் இதுவரை ஐந்து வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். ரவிசந்திரன் அஷ்வினை சென்னை அணி ஏலத்தில் விட்டுக்கொடுத்தாலும், ஆர்.டி.எம். முறையை பயன்படுத்து டு பிளிசிஸ், வெய்ன் பிராவோவை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதனால் சென்னை அணி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இது தவிர முன்னணி சுழல் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், ஆஸ்திரேலியா அணியின் ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன், இந்திய ஆல்-ரவுண்டர் கெதார் ஜாதவ், அம்பதி ராயுடு, இம்ரான் தாஹிர் ஆகியோரும் சென்னை அணியில் இடம்பிடித்துள்ளனர். சென்னை அணியில் ரெய்னா, ஜடேஜா, பிராவோ, வாட்சன், கெதார் ஜாதவ் ஆகியோருடன் சேர்த்து இதுவரை ஐந்து ஆல்-ரவுண்டர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

சென்னை அணி வீரர்கள் விவரம்:

மகேந்திர சிங் டோனி – ரூ. 15 கோடி
சுரேஷ் ரெய்னா – ரூ. 11 கோடி
ரவிந்திர ஜடேஜா – ரு. 7 கோடி
டு பிளிசிஸ் – ரூ. 1.60 கோடி
ஹர்பஜன் சிங் – ரூ. 2 கோடி
வெய்ன் பிராவோ – ரூ. 6.40 கோடி
ஷேன் வாட்சன் – ரு. 4 கோடி
கெதார் ஜாதவ் – ரூ. 7.80 கோடி
அம்பதி ராயுடு – ரூ. 2.20 கோடி
இம்ரான் தாஹிர் – ரூ. 1 கோடி