சென்னை சுப்பர் கிங்ஸ் அணி யில் இத்தனை பிரபலங்களா!!!

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி யில் இத்தனை பிரபலங்களா!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், டிவேயின் பிராவோ, ஃபாப் டூ பிளெஸ்ஸிஸ் ஆகியோர் தக்க வைக்கப்பட்டனர். மூத்த வீரர்களான ஹர்பஜன் சிங், ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் ஆகியோர் சென்னை அணியில் இடம்பிடித்துள்ளனர்.

ஐ.பி.எல். சூதாட்டப் புகாரில் இரு ஆண்டுகள் தடைக்குப் பின்னர் இந்த ஆண்டில் மீண்டும் களம் காண்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த அணியில் மகேந்திரசிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா ஆகிய மூன்று வீரர்கள் தக்க வைக்கப்பட்ட நிலையில், அணியில் இடம்பிடிக்கப் போகும் மற்ற வீரர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மத்தியில் நிலவியது. அந்த எதிர்பார்ப்பு பூர்த்தி அடையும் விதமாகவே முதல் நாள் ஏலம் நடைபெற்று இருப்பதாகக் கருதப்படுகிறது.

சென்னை அணியின் சொத்தாக கருதப்படும் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் டிவேய்ன் பிராவோ-வை 6 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு சென்னை அணி ஏலம் எடுத்தது. இவரையும், தென்னாப்பிரிக்க வீரர் ஃபாப் டூ பிளெஸ்ஸீஸையும் ரைட் டூ மேட்ச் கார்டை பயன்படுத்தி சென்னை அணி தக்க வைத்துக் கொண்டது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கை 2 கோடி ரூபாய்க்கு சென்னை அணி ஒப்பந்தம் செய்தது. ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன், தென்னாப்பிரிக்கா வீரர் இம்ரான் தாஹீர், மற்றும் இந்திய வீரர்கள் கேதர் ஜாதவ், கரன் சர்மா, அம்பதி ராயுடு, ஆகியோரும் சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]