சென்னை அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

பெங்களூருவுக்கு எதிரான ஐ.பி.எல்., போட்டியில், சென்னை அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.

இந்தியாவில் 11வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. இதில் நேற்று நடந்த லீக் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதின. பெங்களூரு, சின்னச்சாமி மைதானத்தில் நடந்த இதில், ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, பீல்டிங் தேர்வு செய்தார்.

பெங்களூரு அணிக்கு கேப்டன் கோஹ்லி(18), குயின்டன் டி காக் ஜோடிநல்லதுவக்கம் கொடுத்தது.பின்,டிவிலியர்சுடன் இணைந்த,குயின்டன், அரைசதம் எட்டினார்.ஷர்துல் ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்த டிவிலியர்ஸ், ஐ.பி.எல்., அரங்கில் 25வது அரைசதம் எட்டினார்.இந்த ஜோடி53 பந்தில், 103 ரன்கள் சேர்த்த போது, ஒரு வழியாக பிராவோ பந்தில், குயின்டன் (53) அவுட்டானார். அடுத்த சில நிமிடத்தில், டிவிலியர்ஸ்(68), ஆண்டர்சனை (2)அவுட்டாக்கி, திருப்பம் தந்தார் இம்ரான் தாகிர். மன்தீப்(32),கிராண்ட்ஹோம் (11), நேகி (0), உமேஷ் யாதவ்(0) கைவிட்ட போதும்,பெங்களூரு அணி 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. வாஷிங்டன் சுந்தர் (13) அவுட்டாகாமல் இருந்தார்

கடின இலக்கைத் துரத்திய சென்னை அணிக்கு, துவக்கம் சரி இல்லை. வாட்சன் (7), ரெய்னா (11), பில்லிங்ஸ் (9) வரிசையாக கிளம்பினர். முன்னதாக வந்த ஜடேஜா (3), வாய்ப்பை வீணடித்தார். சுந்தர் ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்சர் அடித்த அம்பதி ராயுடு, நேகி பந்தில் சிக்சர் அடித்து, அரைசதம் எட்டினார். இவருடன் இணைந்த தோனி, நேகி பந்துகளில் 3 சிக்சர் அடித்தார். 61 ரன்னில் தப்பிய ராயுடு, 82 ரன் எடுத்து, ரன் அவுட்டானார். சிராஜ் வீசிய 19 வது ஓவரில் 3 ‘வைடு’ உட்பட 14 ரன் கிடைக்க, கடைசி ஓவரில் சென்னை வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்டன.

ஆண்டர்சன் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த பிராவோ, 2வது பந்தில் சிக்சர் அடிக்க, 4 பந்தில் 6 ரன் தேவைப்பட்டது. 3வது பந்தில் 1 ரன். அடுத்த பந்தில் தோனி ஒரு ‘சூப்பர்’ சிக்சர் விளாச, சென்னை அணி 19.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 207 ரன்கள் எடுத்து, ‘திரில்’ வெற்றி பெற்றது. ‘டுவென்டி-20’ அரங்கில் 101 வது முறையாக அவுட்டாகாமல் இருந்த தோனி (70), பிராவோ (14) களத்தில் இருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]