சென்னை அணி இன்றைய போட்டியில் வெற்றிபெருமா?? பெரும் எதிர்பார்ப்புடன் தல – தளபதி மோதல்?

இன்றைய ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் சென்னை அணி, பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது.

இன்றைய ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் சென்னை அணி, பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது.

இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுகான தொடர் முக்கிய நகரங்களில் தற்போது நடந்து வருகிறது.

இந்த நிலையில், இன்றைய 35வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இதுவரை நடந்த 20 போட்டியில், சென்னை அணி 13 போட்டியிலும், பெங்களூர் அணி 7 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

புனேயில் நடந்த போட்டியில் பெங்களூர் அணி 4 போட்டியிலும், சென்னை அணி 3 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், இதுவரை இரு அணியும் நேருக்கு நேர் மோதியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு எதிராக தோனி 678 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருக்கிறார். ரெய்னா 3வது இடத்தில் உள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]