சென்னை அணியில் விளையாடபோவது இவர்கள்தான்- முக்கியமான 3 வீரர்கள் இல்லை முழுவிபரம் உள்ளே!!

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான சென்னை அணியின் ஆடும் லெவன்இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஒவ்வொரு ரசிகரும் ஆவலுடன் காத்திருக்கும் இந்த வருடத்திற்கான தொடர் இன்று மாலை துவங்குகிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன.இந்த போட்டிக்கான சென்னை அணி எதுவாக இருக்கும் ஆடும் லெவனில் இருக்கப்போகும் வீரர்கள் யார் என்பது கேள்விக்குறியாக இருந்தது.தற்போது அதுபற்றிய ஒரு தகவல் வெளிவந்துள்ளது.அதன்மூலம் சென்னை அணியின் ஆடும் லேவனை கீழே காண்போம்.

முரளி விஜய்;

தமிழக வீரரான முரளி விஜயை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே இந்த முறையும் தனது அணியில் எடுத்து கொண்டது. இவரே சென்னை அணிக்கு துவக்கம் கொடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

சேன் வாட்சன்;

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரும், தலை சிறந்த ஆல் ரவுண்டருமான சேன் வாட்சனே இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்றொரு துவக்க வீரராக களமிறங்க 90 சதவீத வாய்ப்புகள் உள்ளன.

சுரேஷ் ரெய்னா;

மிஸ்டர் ஐ.பி.எல் என்று பெயரெடுத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செல்லப்பிள்ளையான சுரேஷ் ரெய்னா இந்த தொடரில் மீண்டும் தன்னை நீருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஒரு போட்டியில் கூட ரெய்னா சொதப்பாமல் மாஸ் காட்ட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த செனனை ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

தோனி;

இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் சென்னை அணியை வழிநடத்த சென்னையின் மஞ்சள் நிற ஜெர்சி அணியும் தோனியின் பேட்டிங் வரிசையில் இந்த முறை மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று சென்னை அணியின் பயிற்சியாளரே சமீபத்தில் பேசியிருந்தார், இதனை வைத்து பார்க்கும் போது வழக்கமாக 6 அல்லது 7வது இடத்தில் இறங்கும் தோனி இந்த முறை 4வது இடத்தில் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளன. ஒருவேளை தோனி 4வது இடத்திலேயே களமிறங்கும் பட்சத்தில் அது சென்னை அணிக்கு பெரிதும் உதவும்.

ரவீந்திர ஜடேஜா ;

ஆல் ரவுண்டரான ஜடேஜா சமீப காலமாக பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை. இவருக்கான வாய்ப்பும் சமீப காலமாக குறைந்து கொண்டே வருகிறது. இந்த தொடரை ஜடேஜா பயன்படுத்தி கொள்ளும் பட்சத்தில் இந்திய அணியில் கூட ஜடேஜா இடம்பிடிக்கலாம்.

அம்பதி ராயுடு ;

மும்பை அணியில் இவ்வளவு காலம் இடம்பிடித்திருந்த அம்பதி ராயுடு தற்போது சென்னை அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்த நிலையில் இவருக்கு இடம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

கேதர் ஜாதவ்;

ஜடேஜாவை போல கேதர் ஜாதவும் தன்னை இந்த தொடரில் நிச்சயம் நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இவருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொடுத்துள்ள தொகை 7.5 கோடியாகும்.

லுங்கி நிகிதி;

சமீபத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது அபார பந்துவீச்சு மூலம் மாஸ் காட்டிய நிகிதி இந்த தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அவர் சர்வதேச அளவில் தலை சிறந்த பந்துவீச்சாளராக பார்க்கப்படுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

ஷர்துல் தாகூர்;

வளர்ந்து வரும் இளம் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஷர்துல் தாகூர் இந்த தொடரை பயன்படுத்தி கொண்டு இந்திய அணியில் தனக்கான ஒரு இடத்தை கெட்டியாக பிடித்து வைத்து கொள்ள வேண்டும்.

மார்க் வுட்;

மார்க் வுட் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தனக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

கரன் சர்மா;

கடந்த தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ள கர்ன் சர்மா இந்த தொடரில் சென்னை அணிக்காக விளையாட உள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]