சென்னையில் சமந்தா – அணிதிரண்ட ரசிகர் கூட்டம்!!

திருமணத்திற்கு பின் முதன் முறையாக சென்னை செங்குன்றம் வந்த நடிகை சமந்தாவைக் காண திரளான ரசிகர்கள் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாக சைதன்யா – சமந்தா திருமணம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னும் அவர் நடிப்பு பணியை தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று செங்குன்றத்தில் ஒரு ஷாப்பிங் மாலை திறந்து வைப்பதற்காக சமந்தா வருகை தந்தார். சமந்தா வருவதை அறிந்து அங்கு இளைஞர்கள் திரள தொடங்கினர். முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்யப்படாததால் இளைஞர் பட்டாளத்தை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர்

சாலையின் இரு புறங்களிலும், வளாக வாயிலிலும் ரசிகர்கள் திரண்டனர். இதை அடுத்து ஏராளமான தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சமந்தாவைக் கண்டதும் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.கடும் நெரிசல்களுக்கு இடையே நடிகை சமந்தா பாதுகாப்பாக வளாகத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டார். ஏராளமானோர் சமந்தாவை செல்போனில் படம்பிடித்தனர்.

தொடர்ந்து கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்ததால் செங்குன்றம் – சென்னை இடையே போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பின்னர் போக்குவரத்து போலீசார் வரவழைக்கப்பட்டு போக்குவரத்து மீண்டும் சீர் செய்யப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]