சென்னையில் கலவரம்: 108 மாநகர பேருந்துகள் சேதம்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று நடந்த வன்முறை சம்பவத்தில் 108 மாநகர பேருந்துகள் சேதமடைந்ததாக மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. அத்துடன், 57 காவல்துறை வாகனங்கள், 50க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்ததாக கூறியுள்ள காவல்துறை, நேற்றைய வன்முறை சம்பவத்தால், 97 போலீசார் காயமடைந்ததாகவும், தடியடி நடத்தியதில் 63 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

chennai riot
சென்னை முழுவதும் நேற்றைய தினம் 140 இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றதாகவும், அதன்போது, வன்முறைகளில் ஈடுபட்ட 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அத்துடன், அதிகபட்சமாக, எம்கேபி நகரில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறை, வடபழனி காவல் ஆய்வாளர் ஆல்பின்ராஜ் கார் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும், அது தொடர்பாக 8 பேரைக் கைது செய்துள்ளதாகவும் கூறியுள்ளது.