சென்னையில் கன மழை இயல்பு வாழ்கை பாதிப்பு!

சென்னையில் கன மழை இயல்பு வாழ்கை பாதிப்பு!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதால் சென்னையில் நேற்று மாலை முதல் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ளது.

இதன் காரணமாக தெருக்களில் மழை நீர் தேங்கியதன் காரணமாக போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள நிறுவனங்கள் அனைத்தும் வெள்ளிக்கிழமையன்று விடுமுறை அளிக்க மாநில வருவாய் நிர்வாகத் துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் புதன்கிழமை பிற்பகலுக்குப் பிறகு மழை இல்லாமலிருந்த நிலையில், வியாழக்கிழமையன்று மாலை 6 மணியளவில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை நள்ளிரவையும் தாண்டி நீடித்தது.

இதன் காரணமாக, நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்க ஆரம்பித்தது.

சாலைகளில் மழை நீர் தேங்க ஆரம்பித்ததால், நகர் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால், பலர் தங்கள் இல்லங்களுக்குத் திரும்புவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

சென்னையில் உள்ள பிரதான பாலமான கத்திபாரா பாலத்திற்கு கீழ் மழை நீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர். துரைசாமி சுரங்கப்பாதை, ஈக்காடுதாங்கலில் உள்ள அடையாறு தரைப்பாலமும் மூடப்பட்டது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]