செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் கடமைகளை பொறுப்பேற்பு!!

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேச சபையின் தவிசாளர் நாகமணி கதிரவேல் (பேரின்பம்) இன்று திங்கட்கிழமை (16) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

பிரதேச சபை செயலாளர் க.பேரின்பராஜா தலைமையில நடைபெற்ற இந்நிகழ்வில் சபையின் உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள், பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேச சபையின் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நாகமணி கதிரவேல் (பேரின்பம்) ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் குடியிருப்பு வட்டாரத்தில் போட்டியிட்டு 955 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றிருந்தார்

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் முதலாவது அமர்வின் போது தவிசாளருக்காகப் போட்டியிட்டு 18 வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டார்.

சபைக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் 8 பேரும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் 8 பேரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் 7 பேரும், தெரிவுசெய்யப்பட்டிருந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் 4 பேரும், தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு சார்பில் 2 பேரும், ஐக்கிய சமாதான கூட்மைப்பு சார்பில் ஒருவரும் ஜனநாயக தேசிய இயக்கம் சார்பில் ஒருவரும் தெரிவாகியிருந்தனர்.

கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்விற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களான எஸ்எம்.முகமது ஜௌபர், வனேந்திரன் சுரேந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் முத்துப்பிள்ளை முரளிதரன் ஆகியோர் சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]