செங்கலடி நகரில் கால்நடை வளர்ப்பாளர்கள் பாரிய ஆர்பாட்டம்

செங்கலடி நகரில் கால்நடை வளர்ப்பாளர்கள் பாரிய ஆர்பாட்டம்

கால்நடை வளர்ப்பாளர்கள்

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலக பகுதியில் மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கப்பட்ட காணியினை வேளாண்மை செய்கையாளர்களுக்கு வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்டும் நடவடிக்கையினைக் கண்டித்து காடுகளை அழிப்பதைத் தடுக்குமாறு கோரியும் இன்று (17) வெள்ளிக்கிழமை செங்கலடி நகரில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.

பிரதேச கால்நடை அபிவிருத்தி, பால் சேகரிப்பு கால்நடை வளர்ப்போர் சங்கங்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்பாட்ட பேரணியில் நுற்றுக்கணக்கான தமிழ் – முஸ்லிம் பண்ணையாளர்கள் கலந்துகொண்டனர்.

தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைய ஏந்தி செங்கலடி சந்தியில் ஆரம்பாமான ஆர்ப்பாட்டப் பேரணி பிரதேச செயலகம் வரை சென்றது. பிரதேச செயலக முன்றில் தமது கோரிக்கை முன்வைத்து கோசங்களை எழுப்பியவண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டதின் இறுதியில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை பிரதேச செயலாளர் நல்லையா வில்வரத்னத்திடம் கையளித்தனர்.

கால்நடை வளர்ப்பாளர்கள்

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட புலியடிப்பொத்தானை, மேசைக்கல், வெள்ளைக்கல், கார்மலை, கிடாரம் போட்ட மடு மற்றும் பொட்டான்கச்சி போன்ற பகுதிகள் மேச்சர்ல தரைக்குரிய இடங்களாக 2011ஆம் ஆண்டு மேய்ச்சல் தரைக்குரிய இடங்களாக அளந்து கொடுக்கப்பட்டு 2012ஆம் ஆண்டு அரசாங்க அதிபர், கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் பிரதியமைச்சர்கள் முன்னிலையில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இப்பகுதியில் உறுதிக் காணி உள்ளடக்கப்பட்டிருந்தால் அப்ஆவணங்கள் உரிய முறையில் பரிசீலணை செய்த பின்பு உண்மை என கருதும் பட்சத்தில் மாற்று நிலமாக அரசிடமுள்ள விவசாயக் காணிகள் வழங்கப்படும் என முடிவு எடுக்கபட்டது.

கால்நடை வளர்ப்பாளர்கள்

இந்த நிலையில் தற்போது மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கப்பட்ட காணிகளை ஏறாவூரைச் சேர்ந்த அரசியல் வாதிகளின் தூண்டுதலின் போரில் பகிர்தளிக்க முற்படுவதால் எதிர்காலத்தில் தமது கால்நடைகளை பராமரிக்க முடியாத நிலை கால்நடை வளர்பாளர்களுக்கு ஏற்படும் என்ற அச்சம் தோன்றியுள்ளது. இதன் காரணமாக தமிழ் மற்றும் முஸ்லிம் கால்நடை வளர்ப்பாளர்கள் பாதிக்கப்படவுள்ளனர்.

மேய்ச்சல் தரைக்குரிய காணிகளை பகிர்ந்தளிப்பதை தடுக்குமாறு கோரியும் காடுகளை அழிப்பதைத் தடுக்குமாறு கோரியும் ஆர்ப்பாட்டப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கால்நடை வளர்ப்பாளர்கள்

அரச காணிகளை அபகரிக்காதே, மேய்ச்சல் தரையினை மீட்டுத் தாருங்கள். மாடுகளை யேவிடுங்கள் மக்களை வாழ் விடுங்கள், சட்டவிரோத காணி பகிர்ந்தளிப்பபை நிறுத்து, வேண்டும் வேண்டும் மேய்ச்சல்த் தரை வேண்டும், மேய்ச்சல்த் தரையை அபகரிக்காதே கால்நடைகளை மேயவிடு, காடுகளை அழிக்காதே மேய்ச்சல்த் தரையை உடமையாக்காதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை எந்தியவண்ணம் கோசங்களையெழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் நல்லையா வில்வரத்னம் கருத்து தெரிவிககையில் – கால்நடை வளர்ப்பாளர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்துள்ளார்கள். இது தொடர்பாக ஆராய்ந்து மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கால்நடை வளர்ப்பாளர்கள்

1983ஆம் ஆண்டுக்கு முன்பு அந்த பகுதியில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொண்டவர்கள் உரிய ஆவணங்களின் மூலப் பிரதிகளை சமர்பிக்கும் பட்டசத்தில் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முறுகல் ஏற்படாத வகையில் மாற்றுக் காணி வழங்குவது தொடர்பாக ஆராயப்படும் என்றார்.

கால்நடை வளர்ப்பாளர்கள்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]