செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 200 டெங்கு நோயாளிகள்

செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 200 டெங்கு நோயாளிகள்
மட்டக்களப்பு செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த ஆண்டின் இதுவரை 200 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர் இதுவரை மரணங்கள் ஏற்படவில்லை என சுகாதார வைத்திய அதிகாரி இ.சிறிநாத் தெரிவித்தார்.

டெங்கு நோய் காரணமாக நாட்டில்  8 பேர் மரணமடைந்துள்ளனர். இதில் மட்டக்களப்பில் 3 இறப்புகள் பதிவாகியுள்ளன என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு செங்கலடி பொதுச் சுகாதார பிரிவின் ஏற்பாட்டில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்பாக ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை தெழிவூட்டும் கருத்தரங்கு இன்று திங்கட்கிழமை (16) சபை மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
டெங்கு நோயாளிகள்டெங்கு நோயாளிகள்

ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் நாகமணி கதிரவேல் (பேரின்பம்) தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் சுகாதார வைத்திய அதிகாரி இ.சிறிநாத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் –

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குவின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. கடந்த காலங்களில் கொள்கலன்களில் நீர் தொங்கி நிற்பது பெரும் பிரச்சினையாக காணப்பட்டது அவற்றை பெருமளவில் அகற்றியுள்ளோம். தற்போது டெங்கு பரவக்கூடிய இடங்களாக நீர் தாங்கிகள் கிணறுகள் என்பன அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

பிரதேசத்தில் காணப்படும் வெற்றுக் காணிகளில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. பிரதேசத்திலுள்ள அடையாளப்படுத்தப்படாத காணிகள் தொடர்பாக பிரதேச சபை ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நாட்டின் மொத்த நிலப்பரப்பில் ஒரு சதவீதமான நிலப்பரப்பபையம் மாவட்டத்தில் இரண்டாது சனத்தொகையினையும் உள்ளடக்கிய செங்கலடி பிரதேசமானது இங்கு சுகாதாரத்றையை வலுப்படுத்த வேண்டிய தேவை அதிகம் உள்ளது. சில இடங்களில் மனிதவலுப் பற்றாக்குறை எங்களுக்கு காணப்படுகிறது. அந்த பகுதிகளில் பிரதேசசபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் உதவியுடன் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும்” என்றார்.