செங்கலடியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு

நாம் எமது பிள்ளைகளின் சுற்றுச் சூழலை மதுபானம் மற்றும் சிக்கரட் புகையிலிருந்து விடுவிப்போம் எனும் கருப் பொருளில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் இன்று (14) வியாழக்கிழமை செங்கலடியில் நடைபெற்றது.

மட்டக்களப்பு செங்கலடி வாழ்வின் எழுச்சி சமூர்த்தி சமூக அபிவிருத்தி மன்றம் மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச செயலகம்; இணைந்து விழிப்புணர்வுப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தன.

செங்கலடி சமூர்த்தி அலுவக முன்றலில் ஆரம்பமாகி பேரணி செங்கலடி பிரதான வீதியினூடாக பதுளைவீதி சந்திவரை சென்று பின்பு பிரதேசசெயலகத்தை வந்தடைந்து.

செங்கலடியில் போதை செங்கலடியில் போதை செங்கலடியில் போதை

வழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் புகைத்தலின் அபாயத்தினை ஒழித்து வறுமை நிலையினைக்குறைத்து அபிவிருத்தியினை மேம்படுத்துவோம், புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு புகைத்தலற்ற, மதுபானமற்ற வளமான புதியதோர் சமுதாயத்தை உருவாக்குவோம், சிகரட் மூலம் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லும் பணத்தை நமது நாட்டின் அபிவிருத்திக்குப் பயன்படுத்துவோம், புகைத்தல் அற்ற குடும்பங்களை உருவாக்குவோம், ஒழுக்க நெறி நிறைந்த சுபீட்சமான கிராமத்தை கட்டி எழுப்புவோம் போன்ற சுலோகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்திச் சென்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]