முகப்பு Cinema ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் டிரைலர் இன்று வெளியானது!

‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் டிரைலர் இன்று வெளியானது!

மணிரத்னம் இயக்கத்தில் பல பிரபல நட்சத்திரப் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரகாஷ்ராஜ், அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அரவிந்த்சாமியின் மனைவியாக ஜோதிகாவும், அருண்விஜய் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷும், சிம்பு ஜோடியாக டயானா எரப்பாவும் வருகின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையுடன் சண்டைக் காட்சிகளுடன் வெளியாகி இருக்கும் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

காரசாரமான வசனங்களுடன் குடும்பம் மற்றும் நட்புக்கு இடையே நடக்கும் போராட்டத்தை மையப்படுத்தி காதல், நட்பு, அதிரடி என அனைத்தும் கொண்ட படமாக இருப்பதாக எதிர்பார்க்கலாம்.

மேலும் ‘செக்கச் சிவந்த வானம்’ எதிர்வரும் செப்டம்பர் 28-ஆம் திகதி ரிலீசாக இருக்கிறது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com