‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் 2வது டிரைலர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது

செக்கச் சிவந்த வானம்’ படத்தின் 2வது டிரைலர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’

இந்த படத்தில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் ரிலீசாக இருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சமீபத்தில் வெளியான பாடல்களும், படத்தின் டிரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

எனவே படம் எதிர்வருகிற செப்டம்பர் 27-ஆம் திகதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் இரண்டாவது டிரைலர் நாளை வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]