சூழ்ச்சி செய்தவர்களின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஒருபோதும் விமோசனம் கிடைக்கப்போவதில்லை

சூழ்ச்சி செய்தவர்களின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஒருபோதும் விமோசனம் கிடைக்கப்போவதில்லை இன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

மே தின நிகழ்வையொட்டி அதன் ஏற்பாடுகள் தொடர்பில் அவரது காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தற்போது நாட்டு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

நான் 10 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்தேன் எனது காலத்தில் காலத்தில் இனவாதம் எப்போதும் தலைதூக்கவில்லை.2012 ம் ஆண்டு சம்பிக்க ரணவக்கவே புர்கா மற்றும் ஹலால் பிரச்சினையை ஆரம்பித்து வைத்தார்.2014ம் ஆண்டு தேர்தல் வருவதை அறிந்துகொண்டு அவ்வருட நடுப்பகுதில் அலுத்கமை கலவரத்தினை திட்டமிட்டு செய்துள்ளார்கள்.நாம் இது தொடர்பில் தெளிவு பெறும் போது பஸ் போய்விட்டது.

ஆட்சி மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஒருவரே ஞானசார தேரரை ஏவிவிட்டு கோத்தாவை அவர்களது காரியாலய திறப்புக்கு அழைத்து மாயையான தோற்றம் ஒன்றை உருவாக்கி முஸ்லிம்களை எம்மிடம் இருந்து பிரித்தனர்.

இன்று நாட்டில் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் எமது காலத்தில் இல்லாத அளவு அதிகரித்து விட்டது.எம் மீது ஏவி விட்டு முஸ்லிம்களை எம்மிடம் இருந்து பிரித்த பேயை இன்று அவர்களின் தேவைகளுக்காக பயன்படுத்துகிறார்கள்.

இந்த நல்லாட்சி அரசு முஸ்லிம்களிடம் எம்மை எதிரிகளாக சித்தரித்து முஸ்லிங்களின் இருப்பை இன்று கேள்விக்கு உள்ளாக்கிவருகிறது.எம்மை எதிரியாக பார்த்து முஸ்லிம்கள் தங்கள் இருப்புக்களை இழந்துவிடக்கூடாது.

அலுத்கமை கலவரம் தொடர்பில் ஜனாதிபதி விசாரனை ஆணைக்குழு ஒன்றை அமைத்து விசாரனை செய்தால் அலுத்கமை கலவரத்தின் சூத்தரதாரிகள் யார் என்பது வெளிச்சத்துக்கு வரும் .இல்லாவிட்டாலும் கூட உண்மை ஒரு நாள் வெளியே வரும் .அதனை பல நாட்கள் ஒழித்து வைக்க முடியாது .அன்று இந்த நாட்டு முஸ்லிம்கள் தலையில் கையை வைப்பார்கள். உண்மையான துரோகிகள் யார் என்பதையும் அவர்களுக்கு எதிராக சூழச்சி செய்து ஆட்சிபீடம் ஏறியவர்கள் யார் என்பதையும் அப்போது அவர்கள் உணர்ந்துகொள்வார்கள் என அவர் குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]