‘சூழல் புனிதமானது’ என்ற நிகழ்ச்சித்திட்டம் – ஜனாதிபதி தலைமையில்

வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி தலதா மாளிகையில் சூழல் புனிதமானது என்ற நிகழ்ச்சித்திட்டம்; ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமானது.
சர்வதேச வெசாக் நிகழ்வு கண்டி தலதா மாளிகை வளாகத்தில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு இன்று குறித்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவின் எண்ணக்கருவிற்கு அமைவாக மத்திய மாகாண சபையினால் இந்த நிகழ்ச்சித்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், கண்டி நகரத்தின் முக்கிய இடங்களை துப்பரவு செய்யும் பணி இதன் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளது.

தலதா மாளிகைக்கு வரும் பக்தர்கள் கைகளை கழுவுவதற்கான இரண்டு உபகரணங்கள் இதன்போது ஜனாதிபதியினால் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேலவிடம் கையளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டம் நடைபெற்ற கண்டி கெட்டம்பே விளையாட்டு மைதானத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி , அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான மஹிந்த அமரவீர, எஸ்.பீ. திஸாநாயக்க, பிரதி அமைச்சர் அநுராத ஜயரத்ன, மத்திய மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

சூழல் புனிதமானது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]