மணிக்கு 263 KM வேகத்துடன் ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் சூறாவளி

மணிக்கு 263 கிலோமீட்டர் வேகத்துடன் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநில கடற்கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் பலமான சூறாவளி ஒன்று அப்பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தீவுகளில் கடும் நாசத்தை உண்டாக்கியுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமையன்று, பிற்பகல் 2 மணி அளவில் (உள்ளூர் நேரப்படி) சூறாவளிகள் பிரிவு வகைபாட்டில் மிக அதிக தாக்கம் மற்றும் பாதிப்பு ஏற்படுத்துவதில் கேட்டகிரி ஃபோர் பிரிவு வகையான டெப்பி சூறாவளி, ஆஸ்திரேலிய பெருநிலப்பரப்பை தாக்கும் என்று கணித்து 25, 000-க்கும் அதிகமான மக்களை அப்பகுதியில் இருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இப்பகுதியில் உள்ள ஏறக்குறைய 23,000 வீடுகள் மின்சார இணைப்பை இழந்துள்ளன.

கடந்த 2011-ஆம் ஆண்டில் தாக்கிய யாஸி சூறாவளிக்கு பிறகு, இப்பகுதியில் வீசும் மிக மோசமான புயல் இதுவாகத்தான் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சூறாவளி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]