கிளரண்டன் தோட்டத்தில் சூறாவளி 112 குடும்பங்கள் பாதிப்பு

சூறாவளி தாக்கத்தால் நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளரண்டன் தோட்ட மேற்பிரிவில் வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாகவே மேற்படி சூறாவளி தாக்கம் ஏற்பட்டுள்ளது.

சூறாவளி

1940ஆம் ஆண்டளவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த லயன் வீடுகளில் கூரைத் தகடுகள் கடும் காற்றால் கழன்றுவிட்டன. வீட்டினுல் நீர் வீட்டினுள் நிரம்பியது. இதனால் வீடுகளை இழந்த 112 குடும்பங்களை கிளரண்டன் தோட்ட அதிகாரி யுவான்டி குமாரசிரி கிளரண்டன் தோட்ட தேயிலைத் தொழிற்சாலையில் தங்கும் வசதிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.

சூறாவளி

பாதிப்புக்குள்ளானர்வர்களில் ஒருவர் கருத்து தெரிவிக்கும்போது,
இந்த வீடுகள் மிகவும் பழமைவாய்ந்தவை. இவ்வீடுகளை உரிய அதிகாரிகள் புதிதாக நிர்மாணித்து தரும்படி வேண்டினோம். பிரதேச செயலாளர் திருமதி. சுஜீவா போதிமான்னவிடம் இது தொடர்பாக வினவியபோது,

பாதிப்புக்குள்ளானவர்களின் வீடுகள் திருத்தியமைக்க செலவு விபரம் தயாரிக்குமாறு தொழிநுட்ப அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும், பாதிப்புள்ளானவர்களுக்குத் தேவையான அளவு உலர் உணவுப்பொதிகள் மற்றும் சுகாதார வசதிகளையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.இந்த சூறாவளி காரணமாக எந்தவொரு நபருக்கும் ஆபத்து ஏற்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]