செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா

சூர்யா செல்வராகவன் சூர்யா நடிப்பில் `தானா சேர்ந்த கூட்டம்’ வருகிற பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது.

சூர்யா அடுத்ததாக செல்வ ராகவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜை புத்தாண்டை முன்னிட்டு சமீபத்தில் நடந்த நிலையில், படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க ரகுல் ப்ரீத் சிங் நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து இந்த படத்தில் சாய் பல்லவி தான் நாயகி என்று முடிவு செய்திருக்கும் நிலையில், ரகுல் ப்ரீத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

இந்த படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக நீராஜா கோனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நீராஜா, சூர்யா – ரகுல் ப்ரீத் சிங் – சாய் பல்லவியுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் ரகுல் ப்ரீத் சிங்கும் படக்குழுவில் இருக்கிறார் என்பது உறுதியாகி இருக்கிறது.

படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]