சூர்யாவுக்கு ஜோடியாகும் பிரியா வாரியர்!!

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக கண்சிமிட்டல் நாயகி பிரியா வாரியர் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் புதிய படம் என்.ஜி.கே. இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி என்ற இரு ஹீரோயின்கள் ஜோடியாக நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா புதிய படத்தின் மூலம் 3வது முறையாக இணைகிறார். இப்படத்தை லைகா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஹரீஷ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு டெல்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நடக்கயிருக்கிறது.

இந்த நிலையில், இப்படத்தில் ஒரு ஆடார் லவ் என்ற படத்தின் டீசரில் தன்னுடைய கண்சிமிட்டல் சைகை மூலம் மிகவும் பிரபலமான பிரியா வாரியர் ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

ஒருவேளை சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டால், மற்றொரு கேரளத்து பைங்கிளி தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது சூர்யா ரசிகர்களுக்கு கொண்டாட்டமான தகவலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]