சூர்யாவின் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.

நடிகர் சூர்யாவின் சிங்கம் படத்தின் 3ஆம் பாகமான ‘எஸ் 3’ வரும் 26ஆம் திகதி பிரமாண்டமாக தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக சூர்யா நாளை முதல் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.

நாளை சூர்யா திரையரங்குகளில் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியின்போது இந்த படத்தின் புதிய டீசர் மற்றும் முக்கிய காட்சிகளில் சிலவற்றை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், ராதாரவி, விவேக், நாசர், ராதிகா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

பிரியன் ஒளிப்பதிவாளராகவும் வி.டி.விஜயன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.