சூர்யாவின் குடும்பத்திற்கு இப்படி ஒரு நிலைமையா? முழுவிபரம் உள்ளே!!

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு தமிழ் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா என தென்னிந்தியா முழுவதும் பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது. இந்நிலையில் சூர்யாவின் உறவினர் ஞானவேல்ராஜா தான் ஸ்டுடியோ க்ரீன் என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இந்த நிறுவனத்தில் கீழ் தான் பல படங்களில் சூர்யா நடித்தார்.

தற்போது ஒரு நிகழ்ச்சியில் ஞானவேல்ராஜா பேசுகையில் ‘தெலுங்கில் எல்லாம் நடிகர்களின் படங்கள் ரூ 100 கோடி வரை ஷேர் கிடைக்கின்றது. ஆனால், அவர்கள் சம்பளம் ரூ 15 கோடி தான் இருக்கும், தமிழில் நடிகர்களின் சம்பளமே ரூ 50 கோடி உள்ளது. எடுத்த அனைத்து படமும் நஷ்டம் தான் அடைகின்றது, இதற்கு நடிகர்கள் கண்டிப்பாக சம்பளத்தை குறைக்க வேண்டும்.

அப்படி இல்லை என்றால் நான் தெலுங்கு பக்கம் சென்று விடுவேன்’ என்று மிகவும் ஆதங்கமாக பேசினார். சூர்யாவின் உறவினரும், சூர்யா, கார்த்தியின் ஆஸ்தான தயாரிப்பாளருமான தயாரிப்பாளர் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா, நேற்று நடைபெற்ற ‘நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா’ படத்தின் தமிழ் டப்பிங்கின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார்.

விஷால் அணியின் சார்பாக வெற்றிபெற்று தயாரிப்பாளர் சங்கச் செயலாளராக இருந்த ஞானவேல்ராஜா, விநியோகஸ்தர் தரப்பிலும் தங்களது அதிகாரத்தை நிறுவுவதற்காக செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களின் விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

இந்நிலையில், தமிழ் சினிமா நடிகர்கள் வாங்கும் சம்பளத்தால் தான் தெலுங்கு சினிமா பக்கம் போகும் முடிவில் இருப்பதாக வருத்தத்தோடு தெரிவித்துள்ளார் ஞானவேல்ராஜா. ‘தெலுங்கு சினிமா உலகத்தைப் பார்த்து நாம கத்துக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. நடிகர்களின் சம்பளம் தான் இங்கே பெரிய பிரச்னையா இருக்கு. அதில் நடிகர் சங்கம் தலையிட்டு நல்ல முடிவைச் சொல்லணும். உதாரணத்துக்கு, தமிழில் ஒரு படத்துக்கு 100 கோடி ரூபாய் வியாபாரம் இருக்குனா 50 கோடி ரூபாய் சம்பளம் கேக்குறாங்க.

ஆனா, தெலுங்கில் 15 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தா போதும். தெலுங்கு சினிமாவில் நடிகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நல்ல புரிதல் இருக்கு. தமிழ் சினிமாவில் சிலரோட சுயநலம் எல்லாத்துக்கும் தடையா இருக்கு. நடிகர்களின் வியாபாரத்திற்கு ஏற்ற சம்பளம் தான் கொடுக்கணும். இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள இந்தச் சூழல் தமிழ் சினிமாவில் வரணும்.

நான் ஏற்கெனவே தெலுங்குப் பக்கம் ஆபிஸ் போட்டுட்டேன். தமிழ் சினிமாவுக்கு டாட்டா சொல்லிட்டு டோலிவுட் பக்கம் போற ஐடியாவில் இருக்கேன். தமிழ்ல படம் எடுத்து நஷ்டமாகுறத விட லாபம் வர்ற இடத்துக்கு போயிரலாம்னு முடிவு பண்ணிட்டேன்’ எனப் பேசினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]