விஜயகாந்த், சரத்குமார் ஏற்கனவே அரசியலில் குதித்திருக்கின்றனர். ரஜினி, கமல், விஜய் நேரடியாக கட்சி தொடங்காவிட்டாலும் அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். விரைவில் கட்சி தொடங்குவேன் என்று கமல் அறிவித்திருக்கிறார். நடிகர் விஷால் ஆர்.கே. நகர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட களம் இறங்கினார். அவரது மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து அவரது அரசியல் ஈடுபாடு வேகமெடுத்திருக்கிறது. இதுவரை நேரடியாகவும் படங்களிலும் அரசியல் பற்றி தீவிரமாக பேசாமலிருந்த சூர்யாவும் தனது அரசியல் உணர்வை வெளிப்படுத்துவார் என்று கூறப்படுகிறது.

இது நானா சேர்த்த கூட்டமல்ல தானா சேர்ந்த கூட்டம் என்று ஒரு படத்தில் ரஜினி பஞ்ச் வசனம் பேசுவார். அந்த வசனத்தை தேடிப்பிடித்து, ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்று தனது படத்துக்கு டைட்டில் வைத்திருக்கிறார் சூர்யா. விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தில் சூர்யா அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்துவார் என்று கூறப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார் கார்த்திக், ரம்யா கிருஷ்ணன் முக்கியவேடங்களில் நடிக்கின்றனர். செந்தில், நந்தா, தம்பி ராமையா, சத்யன், ஆர்.ஜே.பாலாஜி, ஆனந்தராஜ், சரண்யா, கோவை சரளா ஆகியோரும் நடிக்கிறார்கள். இதன் டீஸர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் டிரெய்லர், ஆடியோ விரைவில் வெளியாகவிருக்கிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]