சூரியன் உதயமாகும் நேரத்தில் தூங்கினால் இப்படி ஒன்று நடக்குமா?

சாஸ்திரங்களில் சில நேரங்களில் கண்டிப்பாக அதிகாலை தூங்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர். அதாவது சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள அதிகாலைப் பொழுதை உஷத் காலம் என்பர்.

அந்த சமயத்தில் தேவர்கள், சிவபார்வதி மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் வானமண்டலத்தில் சஞ்சரிப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில் கண்டிப்பாக தூங்கக்கூடாது. தியானம், வழிபாடு போன்ற பயனுள்ள பணிகளைச் செய்யவேண்டும்.

இந்த நேரத்தில் செய்யும் வழிபாடு பலமடங்கு புண்ணியத்தை தரும். சூரியோதயே சாஸ்தமயே சஸாயினம் விமுஞ்சதி ஸ்ரீரபி ஸக்ரபாணிநம் என்கிறது சாஸ்திரம். சூரியன் உதயமாகும் நேரத்தில் தூங்குபவன், இந்திரனைப் போல செல்வச்செழிப்பு கொண்டவனாக இருந்தாலும், அவனை விட்டு திருமகள் விலகி விடுவாள் என்பது இதன் பொருள்.

தினமும் காலை நேரங்களில் ஒரு தீபம் ஏற்றி வைத்து உங்கள் இஷ்ட தெய்வமோ, குருவோ அவர்களிடம் பேசுங்கள். உங்கள் ஆசைகளை சொல்லுங்கள் நீங்கள் இன்று செய்து முடிக்க வேண்டிய வேலைகளை சொல்லி அதற்கு பக்க துணையாக இருக்கும்படி வேண்டி கொள்ளலாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]