சூரியனுக்கு மிக அருகில் செல்லக் கூடிய விண்கலத்தை நாசா விண்வெளி ஆய்வு நிலையம் நேற்று விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.
இதுவரை எந்த விண்வெளி ஆராய்ச்சி விண்கலங்களும் எட்டாத தூரத்திற்கு அதாவது சூரியனுக்கு மிக அண்மையில் இந்த விண்கலம் ஏவப்பட்டுள்ளாக தகவல்கள் வெளிவந்துள்ளனர்.
Parker Solar Probe என பெயரிடப்பட்ட இவ்விண்கலமானது அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலிருந்து ஏவப்பட்டதோடு, இவ்விண்கலம், நாசா ஆய்வாளர்களின் கடந்த ஏழு வருட கடின உழைப்பின் பிரதிபலனாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அந்தவகையில் இது அதியுச்ச வெப்பநிலையைத் தாக்குப்பிடிக்கக் கூடிய வகையிலும் கார் வடிவில் சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஈர்ப்புச் சக்தி அதிகமாவிருக்கும் சூரியனின் ஒளி வட்டத்திற்குட்பட்ட (சூரியனிலிருந்து 3.8 மில்லியன் மைல்களுக்குள்) பகுதிக்குள் விண்கலத்தினை சஞ்சரிக்க வைப்பதே நாசா ஆய்வாளர்களின் குறிக்கோளாகும். இத்திட்டத்தின் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளது.
சூரியனின் காந்தத்தை ஒத்த கோள்களை விலகவிடாது தக்கவைத்துக்கொண்டு, சூரியனின் ஒளிவலயம் சம்பந்தமான புதிய தகவல்களைப் பெற்று ஆய்வுக்குட்படுத்தி வெளியிடுவதே ஆய்வாளர்களின் எண்ணமென குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 1976ஆம் ஆண்டு சூரியனுக்கு 27 மில்லியன் மைல் தூரம் (43 மில்லியன் கிலோ மீற்றர்) வரை சென்ற Helios 2 என்ற விண்கலமே இதுவரை சூரியனுக்கு மிக அருகில் சஞ்சரித்த விண்கலமாக பதிவாகியுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]